144. பின்றேர்க் குரவை
கருங்கழன் மறவரொடு வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின்னா டின்று.

(இ - ள்.) 1வலிய கழல்வீரரொடு விளர்த்த வளையினையுடைய பாணிச்சியர்,பெரிய மேம்பாட்டினையுடையான்றது தேரின்பின் ஆடியது.

(வ - று.)
கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்
வளையா வயவரும் பின்னாக் - கொளையாய்ந்
தசைவிளங்கும் பாடலொ டாட வருமே
திசைவிளங்குந் தானையான் றேர்.

(இ - ள்.) கிளைநரம்பை ஆராய்ந்தமைத்த சுருதியான்மிக்க யாழைவல்ல பாண்கிளையும் தோலாவீரரும் பின்பாக இசையை ஆராய்ந்து தூக்குதல் விளங்கும் பாடுதலுடனே கூத்தாட வரும்; திக்கிலே விளங்கும் சேனையையுடையான்றனது தேர் எ-று.

பாண் என்பது சாதிப்பெயர்.

(18)

1. பெரிய