ஒளிற்றெஃகம் படவீழ்ந்த களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று. (இ - ள்.) ஒளியையுடைய வேல்படுதலான் வீழ்ந்த யானையின்கீழ்ப்பட்டது எ-று. ஒளிற்றெஃகம்: விகாரம். (வ - று.) 1இறுவரை வீழ வியக்கற் றவிந்த தறுகட் டகையரியரிமாப் போன்றான்-சிறுகட் பெருங்கைக் களிறெறிந்துபின்னதன் கீழ்ப்பட்ட கருங்கழற் செவ்வே லவன். (இ - ள்.) பெரியமலை முறிந்து வீழப் போக்கற்றுப் பட்ட கொடுமைத்தொழின்.மேம்பாட்டினையுடைய சிங்கத்தை ஒத்தான்; சிறிய கண்ணினையும் பெரிய கையினையுமுடைய ஆனையையெறிந்து பின்னர் அதன் கீழ்ப்பட்ட வலிய வீரக் கழலினையும் சிவந்த வேலினையும் உடையவன் எ-று. (20)
1. கம்ப.கடறாவு.5; இறுவரை; சீவக.1883. |