இலைபுனை வாகை சூடி யிகன்மலைந் தலைகடற் றானை யரசட் டார்த்தன்று. (இ - ள்.) பச்சிலை விரவித் தொடுத்த வாகைப்பூவைப் புனைந்து மாறுபாட்டை மேற்கொண்டு அலையும் கடல்போன்ற சேனையினையுடைய வேந்தைக் கொன்று ஆரவாரித்தது. எ-று. (வ - று.) சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் சூடுதலும் பாடினார் வெல்புகழைப் பல்புலவர் - கூடார் உடல்வே லழுவத் தொளிதிகழும் பைம்பூண் சுடல்வே லழுவத் தொளிதிகளும் பைம்பூண் உடல்வேந்த னட்டார்த் தரடு. (இ - ள்.) ஒளியாற் சிறந்த வாகைமாலையை மலைந்தான்; மலைந்தானாகத் துதித்தார், பகைவெல்லும் கீர்த்தியை அறிவினையுடையோர் பலரும்; சத்துருக்களது மாறுபாட்டினையுடைய அயிற்படைநடுவே ஒளி திகழும் பசும்பொன்னாற் செய்யப்பட்ட ஆபரணத்தினையும் மாறுபாட்டினையுமுடைய வேந்தன் அரசுகொன்று ஆரவாரித்து எ-று. ஆர்த்துச் சூடினானென்க. (1) |