ஒலிகழலா னகனகருட் பலிபெறுமுரசின் பண்புரைத்தன்று. (இ - ள்.) ஆரவாரிக்கும் வீரக்கழலினை யுடையானது பரந்த மாளிகையிடத்துப் பலியைப்பெறும் முரசினையுடைய தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து 1புதிய புகழ்மாலை வேய - நிதியம் வழங்குந் தடக்கையான் வான்றோய் நகருள் முழங்கு மதிரு முரசு. (இ - ள்.) நிறைந்த மதியையொக்கும் உயர்ந்த கொற்றக்குடையினையுடைய அரசர் தாழ்ந்து புதிதான கீர்த்தித் தெரியலைச் சூட்டப் பொருளைப் பலர்க்குங் கொடுக்கும் பெரிய 2கையினையுடைய அரசனது விண்ணைக்கிட்ட உயர்ந்த மாளிகையிடத்து இப்பொழுது ஆர்ப்பரவம் பண்ணா நின்றது, முன்பு பகையுள்ள காலத்து இடிக்கும் முரசு எ-று. (4) 1. மூவாவிழுப்புகழ் (பு-வெ. 222). 2. கையினையுடையது |