பொய்கழலான் றேரின்பின் மொய்வளை விறலியர் வயவரொடின்று (இ - ள்.) இட்ட வீரக்கழலினையுடையான் தேரின்பின் செறிந்த தொடியினையுடைய பாணிச்சியர் வீரரோடு கூத்தாடியது எ-று. (வ - று.) 12வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும் அஞ்சொல் விறலியரு மாடுபவே-3வெஞ்சமரில் குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற் பின்றேர்க் குரவை பிணைந்து. (இ - ள்.) பொய்யாத செங்கோலினையுடைய அரசனைத் துதித்து வெற்றியினையுடைய வீரரும் அழகிய மொழியினையுடைய பாணிச்சியரும் கூத்தாடா நின்றார் வெவ்விய பூசலிடத்து;மலையையொக்கும் இளைய யானையினையும் கூந்தற்பிடியினையும் ஒப்பத் தேரின்பின் கைகோத்தாடும் கோப்பைக்கொண்டு எ-று. தும்பையின் முன்றேர்க்குரவை பின்றேர்க்குரவை 4போர்க்குச் செல்லும் தேரின்மேல்;இவை வென்றுநின்ற தேரின்மேல். (8)
1. தொல். புறத். சூ. 17, இளம். மேற். (பி-ம்.) 2. வஞ்சமிலாக் 3. வெஞ்சமத்து 4. பொரச்செல்லும் |