2கேள்வியாற் சிறப்பெய்தியானை வேள்வியான் விறன்மிகுத்தன்று. (இ - ள்.) கேட்கக்கடவன கேட்டுத் தலைமைபெற்றவனை யாகத்தான் வெற்றியைப் பெருக்கியது எ-று. (வ - று.) ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள் 3வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்-ஏதம் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து. (இ - ள்.) திரை கரைமீதே தத்தும் கடலே வேலியாகவுடைய நிலத்திடத்து நான்கு வேதத்தினையுங்கற்றவன் தாபதர்க்கரசாய்ச் செம்மாந்திருக்கும்; குற்றத்தைச்சுடும் நெருப்புத்தானாகி எல்லோரும் போற்ற விரும்பின பரந்த அனலையுடைய யாகத்திடத்து எ-று. வேள்வியகத்து வீற்றிருக்குமென்க. (9)
1. சிலப்.23:72. 2. புறநா.166,உரை,மேற். 3. திரி.70;பெருங்.3.3.79-80. |