புகழ்நுவல முக்காலமும் நிகழ்பறிபவ னியல்புரைத்தன்று. (இ - ள்.) தன் கீர்த்தியைச் சொல்ல மூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போல் அம்மூன்று முற்ற வறிதலாற்-றம்மின் உறழா மயங்கி யுறழினு மென்றும் 2பிறழா பெரியோர்வாய்ச் சொல். (இ - ள்.) நாகலோகம் பூலோகம் சுவர்க்கலோகமென்னும் மூன்று லோகத்திலுமுள்ள அந்தகாரத்தைப்போக்கும் அழகிய ஆதித்தனையொப்ப இறப்பு நிகழ்பு எதிர்வெனும் மூன்று காலத்தையும் முடிய அறிதலால் தம்மில் தாம் மாறுபடாதன மாறுபட்டுப் 3பால்புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் எக்காலத்தினுந் தப்பா,சான்றோர் மெய்ம்மொழி எ-று. 4ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வரும் ஆதலால்,அறிபவன் என்றார். (13)
1. பெருங். 4.5:122-4. 2. நற்.289:2-3; பதிற்.63:6-7. 3. புறநா.2:17-8. 4. தொல்.பொருளியல்,சூ.28. |