168. தாபத வாகை
தாபத முனிவர் தவத்தொடு முயங்கி
ஓவுத லறியா வொழுக்குரைத் தன்று.

(இ - ள்.) தபோதனவேடத்தர் புண்ணியத்தோடு தழுவி ஒழிதலுணராத நடையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் 2தோலுடீஇச்
சோர்சடை தாழச் சுடரோம்பி-ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி.

(இ - ள்.) நீரிலே 3பலகால்முழுகி வெறுநிலத்துச்சாய்ந்து மான்றோலைப் புடைவையாகவுடுத்து நெகிழ்ந்தசடைவீழத் தீயைப்பரிகரித்துப் பதியிடத்து அணையாராய்க் காட்டிலுள்ள சாகமூலபலங்களைக் கைப்பற்றித் தெய்வத்தினையும் விருந்தினையும் போற்றுமது,சுவர்க்கத்துத் தம்மைச் செலுத்தும் நெறி எ-று.

(14)

1. தொல்.புறத்.சூ.16,இளம்.மேற்.குறள்.26,பரிமேல்.வி.
2. தோலுடையாச்
3. பலகாலும்