171. 1அரச முல்லை
செருமுனை யுடற்றுஞ் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலங் காவல னியல்புரைத் தன்று.

(இ - ள்.) பெரும் பகையை வருத்தும் சிவந்த சோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரிய புவியைக்காக்கும் அரசன் தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி
மயிர்க்கண் முரச முழங்க - உயிர்க்கெல்லாம்
நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க்
காவலன் சேறல் கடன் .

(இ - ள்.) குற்றத்திடத்துச்செல்லாதே மனுநீதியை உயர்த்தி மயிரால் மிக்க கண்ணினையுடைய வீரமுரசு ஒலிப்ப எல்லாவுயிர்க்கும் நாவலந்தீவின்கண் ஆதித்தனையொத்து வேந்தன் நடத்தல் முறைமை எ-று.

முல்லை - இயல்புமிகுதி.

(17)

1. சீவக. 547, ந.