நவைநீங்க நடுவுகூறும் அவைமாந்த ரியல்புரைத்தன்று. (இ - ள்.) குற்றம் கெட நடுவுசொல்லும் அவைக்களத்துச் சான்றோர் தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னித் தொடைவிடை யூழிவை தோலாத் - தொடைவேட் டழிபட 2லாற்ற லறிமுறையேன் 3றெட்டின் வழிபடர்தல் வல்ல தவை . (இ - ள்.) 4அனுயோகமும் உத்தரமும் முறைமையாக 5அனுயோகத்தையும் உத்தரத்தையும் புத்திபண்ணித் தொடையும் விடையும் முறைமையும் என்றிவை தப்பாத சயபத்திரத்தைவிரும்பித் தோல்வியும்வெற்றியும் நெறியாலே நிச்சயிக்கும் முறைமையை மேற்கொண்டு எட்டின் நெறியே செல்லல்வல்லது அவைக்களம் எ-று. எட்டாவன; "குடிப்பிறப்புக் கல்வி குணம் வாய்மை தூய்மை, நடுச்சொல்லு நல்லணி யாக்கம் - கெடுக்கும், அழுக்கா றவாவின்மை யவ்வி ரண்டோ டெட்டும் , இழுக்கா வவையின்க ணெட்டு " என்பதனான்றிக. (19)
1. குறள். 118, பரிமேல். வி. 2. லாற்றா 3. பு-வெ. 178 : 4 தொல். புறத். சூ. 21; மதுரைக். 161-3, உரை மேற். 4. அபியோக 5. செல்லவும் |