மாறின்றி 1மறங்கனலும் ஏறாண்குடி யெடுத்துரைத்தன்று. (இ - ள்.) எதிரின்றியே ஒழியச் சினமிகும் மேன்மேல் ஏறாநின்ற ஆண்மைத் தன்மையினையுடைய குடியொழுக்கத்தினை உயர்த்துச் சொல்லியது எ-று. (வ - று.) 2கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி 3எய்போற் கிடந்தானென் னேறு. (இ - ள்.) கல்லிலே பொருந்திநின்றான் என் தகப்பன்; என் கணவன் போர்க்களரியிலே பட்டான்; பகைவர் முன்னேநின்று எதிர்த்துப் பூசலிலே விழுந்தார் என் தமையன்மார்; தன் சேனை கெடவும் கெடாதே பின்னே நின்று தன் கைசென்று அம்பைச் செலுத்தப் பகையரசன் மேலே சென்று எய்ப்பன்றிபோலே பட்டுக்கிடந்தான் என்னுடைய புதல்வன் எ-று. (22)
1. மனங் 2. குறள். 764, பரிமேல். மேற். கன்னின்றான்; சீவக. 2302, 3. புறநா. 19 : 13-6; 283 :8; 290 : 5; 297 : 9-10; கலிங்க. 475. |