179. இதுவுமது
தக்காங்குப் பிறர்கூறினும்
அத்துறைக் குரித்தாகும் .

(இ - ள்.) பொருந்தினபடி அந்நியர் சொல்லினும் முற்பட்ட துறைக்கு உரிமையுடைத்து எ-று.

(வ - று.)
1ஊறின் றுவகையுள் வைக வுயிரோம்பி
2ஆறிலொன் றானா தளித்துண்டு - மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான்காவல் 3கொண்ட றகும் .

(இ - ள்.) குற்றமின்றிப் பிரியத்திலே அவதரிப்ப எல்லாவுயிரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கடனாகிய ஆறிலொன்றினை அமையாது பிறர்க்குங் கொடுத்து உண்டு எதிரின்றிச் சுவர்க்கலோகத்தைக் காவல் கொண்ட தன் பிதாவின் நெறியே நிலைநின்று நாடோறும் மன்னன்றான் காவற்றொழிலை மேற்கொள்வது பொருந்தும் எ-று.

(25)

1. இ.வி. புறத். சூ. 15, உரை, மேற்.
2. குறள். 48; இராமா. உத்தர. அரக்கர். 48; திருவிளை. நாட்டு. 28.
3. கொண்டல் : பெருங். 4. 7 : 133.