பொய்யாது புண்மொழிந்தார்க்கு வையாது வழுக்குரைத்தன்று. (இ - ள்.) தப்பாமல் நிமித்தஞ் நிமித்துஞ் சொன்னோர்க்கு வஞ்சியாதே பெறும் முறைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம் பல்லா ரறியப் பகர்ந்தார்க்குச் - சொல்லாற் கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு குடஞ்சுட் டினத்தாற் கொடு. (இ - ள்.) பகைவரது ஆனிரையைக் கொள்ள நினைந்து யாம்போக நிமித்தநன்மையைப் பலருமுணரச் சொன்னார்க்கு மொழியாற் பெறு முறைமை இதுவென்று கருதவேண்டா; ஒன்றொரு குடம்பால் போதும் மிக்க மடியினையுடைய பசு நான்கு இனங்கடோறுங் கொடு எ-று. கடஞ்சுட்ட வேண்டா கொடுவென்க. (18)
1.கரும்பிள்ளை நிமித்தங் கூறியார்க்கு விதந்து கூறியார்க்கு விதந்து கொடுத்தல்; இ-வி. சூ. 603, உரை. |