உளம்புகல மறவேந்தன் களங்கொண்ட சிறப்புரைத்தன்று. (இ - ள்.) மனம் விரும்பச் சினமன்னன் போர்க்களத்தைக்கொண்ட மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 1ஏந்துவட் டானை யிரிய வுறைகழித்துப் போந்துவாண் மின்னும் பொருசமத்து - வேந்தர் இருங்களி யானை யினமிரிந் தோடக் கருங்கழலான் 2கொண்டான் களம் . (இ - ள்.) 3உயர்ந்த வாட்சேனை உடையும்படி கூட்டை நீக்கப் பட்டுப்போந்து வாள் இலங்கும் பொராநின்றபூசலிடத்துப் பகைமன்னருடைய பெரிய மத்தவாரணத்திரள் கெட்டோட வலிய வீரக்கழலினை யுடையான் கைக்கொண்டான், போர்க்களத்தை எ-று. (26)
1. தொல். புறத். சூ. 16, இளம். மேற்.; இ.வி. புறத். சூ. 15, உரை, மேற் . 2. பு-வெ. 225; புறநா. 4 : 3; 53 : 5 : 62 : 12; சீவக. 279, ந.வி.; சிலப். 28 : 104. 3. உயர்ந்த |