182. குடை முல்லை
மொய்தாங்கிய முழவலித்தோட்
கொய்தாரான் குடைபுகழ்ந்தன்று.

(இ - ள்.) பூசலைத்தடுத்த மிக்க உரத்தாலுயர்ந்த தோளினையுடைய மட்டஞ்செய்த மாலையான் குடையைப் புகழ்ந்தது எ-று.

(வ - று.)
வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்
தாய புகழான் றனிக்குடைக்குத் - தோயம்
எதிர்வழங்கு கொண்மூ விடைபோழ்ந்த சுற்றுக்
கதிர்வழங்கு மாமலை காம்பு .

(இ - ள்.) போர்வை ஆகாயம்; இலங்கும் பருதி மேல்வட்டம்; பரந்தகீர்த்தியையுடையான்றன் ஒப்பிலாத குடைக்கு . நீர்த்தாரையை எதிரே சொரியும் மேகம் இடைவிட்ட சுற்றுத்தாமம்; சந்திராதித்தர் வழங்கு மாமேரு காம்பு எ-று.

இடைபோழ்ந்து சுற்றிக் கதிர்வழங்கு மாமலைகாம்பு என்று பாடமோதி, 1மாகத்தைப் பிளந்து சுற்றிக் கதிர்வழங்குமாமலை காம்பென் பாருமுளர்.

(28)

1. மேகத்தைப்