184. 1அவிப்பலி
வெள்வா ளமருட் 2செஞ்சோ றல்ல
துள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று.

(இ - ள்.) தெளிந்த வாட்பூசலிடத்துச் செஞ்சோற்றுக்கடனன்றி நினையாத மறவர் உயிரைப் பலியாகக் கொடுத்தது எ-று.

ஆவியென்பது அவியெனக் குறுகி நின்றது.

(வ - று.)
3சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள்
ஆருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு .

(இ - ள்.) தலைமைமிக்கது இதுவெனச் சொல்லிச் செஞ்சோற்றுக்கடன் தப்பாதபடி சினங்கொண்ட வாட்பூசலென்னும் பெருத்தநெருப்பினுட் பெறுதற்கரிய பிராணனென்னும் அவியைக் கொடுத்தார்; அவ்விடத்தது வால், வீரத்தையுடையார் கிட்டுதற்பகுதியையுடைய சுவர்க்கம் எ-று.

(30)

1. சிலப். 5 : 76-88, அடியார். வி.
2. சீவக. 2240; கம்ப. கும்ப. 156; கலிங்க. 447; வி. பா. 17 -ஆம் போர் .
3. தொல். புறத். சூ. 17, இளம். மேற்.