வான்றோயு மலையன்ன சான்றோர்தஞ் சால்புரைத்தன்று. (இ - ள்.) ஆகாசத்தைக் கிட்டும் வரையையொத்த சான்றாளர் தம்முடைய அமைதியைச் சொல்லியது எ-று. (வ - று.) உறையார் விசும்பி னுவாமதி போல 1நிறையா நிலவுத லன்றிக் - குறையாத வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் 2வான்மையார் சால்பு . (இ - ள்.) மழைநிறைந்த ஆகாயத்திடத்து 3உவாநாள் மதியை யொப்ப நிறைந்து மன்னுதலல்லது குறையாத மரக்கலம் பிளக்கும் கடலிடத்துப் பலபொருளினையும் பெறினும் வேறுபடுமோ , சங்கம்போலத் தூய்மையையுடையாரமைதி! எ-று. (31)
1. மதுரைக். 202-4; புறநா. 182. (பி.ம்.) 2. வாய்மையார் 3. உவாநாளைமதியை |