மயலுறு சீர்த்தி மான்றேர் மன்னவன் இயல்பே மொழியினு மத்துறை யாகும். (இ - ள்.) மயக்கமற்ற மிக்க புகழினையும் குதிரையாற் பூடடப் பட்ட தேரினையுமுடைய அரசன் தன்மையினைச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) ஒள்வா ளமரு ளுயிரோம்பான் றானீயக் கொள்வார் நடுவட் கொடையோம்பான் - வெள்வாள் கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான் ஒழியாமே யோம்பு முலகு. (இ - ள்.) ஒள்ளிய வாட்பூசலிடத்து உயிரைப் பாதுகாவான், தான் கொடுப்ப ஏற்பாரிடை வழங்குதலைப் பரிகரியான், தெளிந்தவாளை உறையினின்றும் வாங்காமே அரசர்கோபத்தைக் கால்விக்கும் வேலினையுடையான் தப்பாமே காக்கும், உலகத்தை எ - று. (7) |