197. துயிலெடைநிலை
அடுதிறன் மன்னரை யருளிய வெழுகெனத்
தொடுகழன் மன்னனைத் துயிலெடுப் பின்று.

(இ - ள்.) கொல்லும் வலியினையுடைய வேந்தர்க்கு அருள எழுந் திருப்பாயாகவெனக் கட்டுங்கழல்வேந்தனைத் துயினீக்கியது எ-று.

(வ - று.)
! அளந்த திறையா ரகலிடத்து மன்னர்
வளந்தரும் வேலோய் வணங்கக் - களந்தயங்கப்
பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமைரைத்
தூமலர்க்க12ணேற்க துயில்.

(இ - ள்.) இட்ட திறையினையுடையார் அகன்ற பூமியிடத்து வேந்த, வென்றிதரும் வேலினையுடையாய், நின்னைப் பணிய, இடம் விளங்கப் பொலிந்த மலர்மீதே பறவைகள் ஆரவாரிக்கும் பொய்கையிற் சூழ்ந்த தாமரையில் தூயமலரையொத்த கண்கள் துயிலாவாக எ - று.

எழுக துயிலென்றுமாம்.

(9)

1. புறநா. 383; 1; பெருங். 4; 7: 91-2.
2. ணேர்க