மன்னிய சிறப்பின் மங்கல மரபிற் றுன்னின னென்றலு மத்துறை யாகும். (இ - ள்.) நின்று நிலைத்த முறைமையினையுடைய மங்கலத்தை முறைமையாலே மேவின்னென்ளறு சொல்லுதலும் முன்புசொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) தீண்டியுங் கண்டும் பயிற்றியுந் தன்செவியால் வேண்டியுங் கங்குல் விடியலும் - ஈண்டிய மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர் வெங்களத்து 1வேலுயர்த்த வேந்து. (இ - ள்.) தீண்டக்கடவன தீண்டியும் காணக்கடவன கண்டும் சொல்லக்கடவன சொல்லியும் தன்னுடைய செவியாற் கேட்கக்கடவன கேட்டும் இரவுப்பொழுது புலர்ந்த்தாகத் திரண்ட மங்கலமானவற்றை அனுபவித்தான், மாற்சரியத்தையுடைய வேந்தர்தம் வெவ்விய போர்க்களத்து வென்று வேலேந்தின அரசன் எ - று. (11)
1. புறநா. 58; 29; 309: 7. |