அவற்றுள், 1. மன்னுறுதொழில் 1வருமாறு :- 2. 2தன்னுறுதொழில் வருமாறு : (இ - ள்.) முன்புசொன்ன இரண்டனுள்ளும் மன்னுறுதொழில் 3வருமுறைமை. எ-று. (வ - று.) 1. 4மண்டு மெரியுண் மரந்தடிந் 5திட்டற்றாக் கொண்ட கொடுஞ்சிலையன் கோறெரியக்-கண்டே அடையார் முனையலற வையிலைவேற் காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து. (இ - ள்.) மிகக் கொளுந்தி எரியாநின்ற நெருப்பினுள்ளே மரத்தை வெட்டியிட்டதன்மைத்தாகக் கையிலே வாங்கிக்கொண்ட கொடிய வில்லையுடையவன் அம்பை ஆராயக்கண்டும் பகைவர் போர் கலங்க வியக்கத்தக்க இலைத்தொழில்களாற் சிறந்த வேலினையுடைய காளாய், ஏற்றையுடைய நிரையைக் கொள்கவென்று சொன்னான் அரசன் எ-று. யாரை ? கொடுஞ்சிலையானை . கண்டுமென உம்மை விரித்துரைக்க . ஏகாரம் : ஈற்றசை . கொண்ட - கொள்ளப்பட்டன; யாவை ? நிரை என முற்றாக்கிச் சூத்திரத்திற்கேற்பப் பொருளுரைப்பாருமுளர் . 2. 4தன்னுறு தொழில் வருமாறு :- (இ - ள்.) தன்னுறு தொழில் வருமுறைமை எ-று. (வ - று.) அறாஅ நிலைச்சாடி யாடுறு தேறல் மறாஅன் மழைத்தடங் கண்ணி-பொறாஅன் கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை நடுங்கடைய நேரார் நிரை. (இ - ள்.) கள்ளறாத நிலைத்தாழியில் அடுதலுற்ற மதுத்தெளிவை மறாதே; குளிர்ந்த பெரிய கண்ணினையுடையாய், தனிசு பொறான் தறு கண்வீரன்; காலிலே வீரக்கழலைக் கட்டினான்; காலையிலே நின் நெடிய வாசலிடத்தனவாம், பகைவர்நிரை எ-று. நிரை காலை நின்கடையவாதலால் மறாதே வார்ப்பாயாகவென்க . நெடியகடையிலே வந்துநின்றன நேரார்நிரையென்று இறந்தகாலப் பொருளாக்கிக் கடுங்கண்மறவன் கழல்புனைந்தவனெனப் பெயராக்கிப் பின்பு வார்ப்பேனெனப் பொறானென்றலுமொன்று .
(பி-ம்.) 1. 'வரலாறு' 2. 'இனித்தன்னுறு' 3. 'வருநெறி' 4. தக்க. 569, உரை, மேற் 5. 'திட்டற்றாற்' |