ஒளியினீங்கா விறற்படையோள் அளியினீங்கா வருளுரைத்தன்று. (இ - ள்.) விளக்கத்தினின்றும் ஒழியாத வெற்றியான்மிக்க ஆயுதத்தையுடையோளது இரக்கத்தினின்றும் ஒழியாத கருணையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி மலிபடைக் கொற்றவை - மீளி் அரண்முருங்க வாகோள் கருதி னடையார் முரண்முருங்கத் தான்முந் துறும். (இ - ள்.) சிங்கத்தாற் சிறந்த அழகிய கொடியினையும் பசுங்கிளி யினையும் பாயுங்கலையினையும் பேய்மிக்க படையினையுமுடைய துர்க்கா தேவி, தலைவன் பகைவர் மாறுபாடு கெடத் தான் முன்னே எழுந்தருளும் எ -று. (20)
1. முருகக்கடவுளுக்கு. |