தாட்டாழ் தடக்கையான் நாட்டது வளமுரைத்தன்று. (இ - ள்.) காலிலே உறத் தாழ்ந்த பெரிய கரத்தினையுடையான் தேசத்தினது நன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) எண்ணி னிடரெட்டு மின்றி வயற்செந்நெற் கண்ணின் மலரக் கருநீலம் - விண்ணின் வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வேல் நகைத்தாரான் றான்விரும்பு நாடு. (இ - ள்.) எண்ணுமிடத்து, எட்டிடரும் ஒழிந்து பழனத்திற் செந்நெலிற் கண்போலப் பூப்ப நீலோற்பலம், தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது; வென்றிவேலினையும் மலர்ந்த மாலையினையு முடையான் பிரியப்படும் தேசம் எ-று. இடரெட்டாவன: 1விட்டில் கிளிநால்வாய் வேற்றரசு தன்னரசு நட்டம் பெரும்பெயல்காற் றெட்டு. (17)
1. சீவக. 64, ந. மேற். |