206. கிணை நிலை
திருக்கிளரு மகன்கோயில்
அரக்கிணைவன் வளமுரைத்தன்று.

(இ - ள்.) செல்வம்பெருகும் பரந்தமாளிகையிடத்து அழகிய கிணை கொட்டுமவனது நன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1வெள்ளி முளைத்த விடியல் வயல்2யாமை
அள்ளகட்ட டன்ன வரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்.

(இ - ள்.) வெள்ளியெழுந்த வைகறையாமத்துச் செறுவின் யாமையினது செறிந்த வயிற்றினையொத்த அழகியகிணையை உபகாரியுடைய வாசற் கடைமுன்னே கொட்டி யானைவாழ்வதாகவென்று சொல்லுவதன் முன்னே என்னிடத்து நின்றும் ஒழிந்தது, துயர் எ-று.

இஃது அரசர் மேற்று:

(18)

1. பொருந.72.
2. பு-வெ.186. (பி-ம்)அடிக்.