செங்களத்துச் செழுஞ்செல்வம் வெண்டுறையாழ்ப் பாணர்விளம்பின்று. (இ - ள்.) சிவந்த போர்க்களரியிடத்து வளவியசெல்வத்தை 1ஆடற் பாட்டினை வல்ல யாழ்ப்பாணர் சொல்லியது எ-று. (வ - று.) ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து வேண்டியாங் கொண்ட விறல்வேழம் - வேண்டாள் வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே விளைகட் பகர்வாள் விலை. (இ - ள்.) திரண்டு பருந்து சிறகடிக்கொள்ளும் வெவ்விய பூசற்களரியிலே விரும்பி யாங்கள் கைக்கொண்ட வெற்றிவாரணத்தை விரும்பாள், 2சங்குகளும் கொம்பும் முழங்கும் வாளையுடைய சேனையினையுடைய மன்னனே, முதிர்ந்த நறவை விற்பாள் அதன்விலைக்கு எ-று. (19)
1. யாழ்ப்பாட்டு 2. பு - வெ. 24. |