216. பாணாற்றுப்படை
சேணோங்கிய வரையதரிற்
பாணனை யாற்றுப்படுத்தன்று

(இ - ள்.) மிகவுமுயர்ந்த மலைவழியிடத்துப் பாணனை வழியிலே செலுத்தியது எ-று.

(வ - று.)
இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற்
கன்றுடை வேழத்த கான்கடந்து- சென்றடையிற்
காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்.

(இ - ள்.) இனிய கோவையினையுடைய நல்லிசையான் மலிந்த யாழினைவல்ல பாணனே,எங்களையொப்பக் களபத்தினையுடைய யானை இயங்கப்பட்ட காட்டைக்கழிந்து சென்று பொருந்தின, அழகுமருவின மென்மையினையுடையாள் கணவன் வாவியிற் பூவாத 1பொற்றாமரைப் பூவைத் தலையிலே சூட்டும் எ-று.

சென்றடையின், தருமென்க.

(28)

1. பு-வெ.31.