எண்ணருஞ் சீர்த்தி யிறைவ னெய்தி மண்ணு மங்கல மலிவுரைத் தன்று. (இ - ள்.) எண்ணுதற்கரிய மிக்க புகழினையுடைய அரசன் பொருந்தி மஞ்சனம் பண்ணும் மங்கலத்தினது மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 1கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள் மங்கலங் கூற 2மலிபெய்திக் - கங்கையாள் பூம்புன லாகங் கெழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து. (இ - ள்.) தாதுவிரியும் மாலையாற்பொலிந்த கன்னியாகிய பேதைமையினையுடைய நல்லவள் மங்கலத்தைச் சொல்லச் சிறந்து மணந்து கங்கை யென்னும் பெயரினையுடையவள் பொலிந்த நீராகியமார்பை அணைந்தான், போரைவெல்லும் புயத்தினையும் வேம்புநிறைந்த மாலையினையு முடைய எங்கள் மன்னன் எ-று. (36)
1. நன். சூ. 409, மயிலை.விரு.மேற். (பி-ம்.) 2. மலிவெய்தி |