228. கந்தழி
சூழநேமியான் சோவெறிந்த
வீழாச்சீர் விறன்மிகுத்தன்று.

(இ - ள்.) வளைந்த திகிரியையுடையவன் சோவென்னும் அரணத்தினை அழித்த கெடாத தன்மையினையுடைய வெற்றியைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.)
1மாயவன் மாய மதுவான் மணிநிரையுள்
ஆயனா வெண்ண லவனருளான் -காயக்
கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
சுழலழலுள் வைகின்று சோ.

(இ - ள்.) கரியவன் வஞ்சம் அவ்வகையால்; மணியையுடைய ஆனிரையிடத்துக் கோவலனாக எண்ணாதேகொள்; அவன் அளியானாகிக் கோபிக்க அசுரர் கட்டின வீரக்கழல் நெகிழ விழியழலக் கையில் தொடியுடைய மகளிர்கள் மயங்கச் சுற்று நெருப்புள்ளே தங்கினது, 2சோவென்னும் அரண் எ-று.

(40)

1. தொல். புறத். சூ. 22, இளம். மேற். 2. பு.வெ. 101; நான்மணி. கடவுள்; சிலப்.17: "மூவுலகும்"; கூர்ம. சுவேதவராக. 5.