இன்னதொன் றெய்துது மிருநிலத் தியாமெனத் துன்னருங் கடவுட் டொடுகழ றொழுதன்று. (இ - ள்.) இன்னதொருபதத்தைக் கிட்டுவோமாக; பெரிய பூமியிடத்து யாங்களெனச் சொல்லிக் கிட்டுதற்கரிய தெய்வத்தின் கட்டும் வீரக்கழலையுடைய பாதங்களைப் பணிந்தது எ-று. (வ - று.) சூடிய வான்பிறையோய் 1சூழ்கடலை நீற்றரங்கத் தாடி யசையா வடியிரண்டும்-பாடி உரவுநீர் ஞாலத் துயப்போக வென்று பரவுதும் பல்காற் பணிந்து. (இ - ள்.) சடையிலே சூடிய வாலிதான இளமதியையுடையோய்! சுற்றிய சுடுகாடான சாம்பலரங்கத்திலே நிருத்தமாடி வருந்தாக சீர்பாத மிரண்டையும் துதித்து, உலாவும் கடல்சூழ்ந்த பூமியினின்றும் பிழைத்து நன்னெறிக்கண்ணே போவோமென்று சொல்லிப் பழிச்சுதும்,பலகாலும் வணங்கி எ-று. (43)
1. தொல். புறத். சூ. 27, ந 2. கலி. கடவுள் வாழ்த்து. |