238. 1குழவிக்கட் டோன்றிய காமப்பகுதி
இளமைந்தர் நலம்வேட்ட
வளமங்கையர் வகையுரைத்தன்று

(இ - ள்.) குழவிப்பதத்தராகிய மைந்தரது நலத்தை விரும்பின காமப்பகுதி நிறைந்த மங்கையரது தன்மையச் சொல்லியது எ-று.

(வ - று.)
2வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண்ணி யஞ்சி யலற -எரிக்கதிர்வேற்
செங்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும்
எங்கோலந் தீண்ட லினி.

(இ - ள்.) அழகிய கந்துகத்தைக் கைப்பற்றிக் கரந்தாய், வாள் வேந்தன் மைந்தனே, செவ்வரி கருவரி பரந்த கண்ணினையுடையாள் பயப்பட்டு அழ; நெருப்புப்போன்ற ஒளிவேலினையும் செவ்விய கோலினையுமுடைய நும்முடைய சாமி கோபத்தினையுடைய யானையின் மேலே தந்து தோன்றினும், எமது அணியினைத் தீண்டாதே கொள், இப்பொழுது எ-று.

(50)

1. பரி 10:107: கலி 51; திருவாய். 6.2 : "மின்னிடை "; திருவேங்கடத். 97 .
2. தொல். புறத். சூ 24. இளம். மேற்; வரிப்பந்து; முருகு. 68; நற் 305:1; கலி. 51:3