நீங்காக் காதன் மைந்தரு மகளிரும் பாங்குறக் கூடும் பதியுரைத் தன்று. (இ - ள்.) ஒழியாத அன்பினையுடைய ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக் கூடும் பதியைச் சொல்லியது எ-று. (வ - று.) 1ஊடிய வூட லகல வுளநெகிழ்ந்து வாடிய மென்றோள் வளையொலிப்பக் -கூடியபின் யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம் ஏம்நீர்க் கச்சியெம் மூர். (இ - ள்.) வழக்காடிய, வழக்காட்டுப்போக மன நெகிழ்ந்து வாட்ட முற்ற மெல்லியதோளில் தொடி ஆர்ப்பப் புணர்ந்த பின்பு இரவுப் பொழுது நீட்டிப்பதாகவெனச் சொல்லி யாழிசைபோலும் சொல்லினை யுடையார் கைகூப்பும் காவலுடைத்தாய்ப் புனலாற்சிறந்த காஞ்சி, எங்கள் பதி எ-று. ஆக வென்பது ஆகெனக் குறைந்து நின்றது. (51)
1. பு.வெ. 317. |