நிழலவி ரெழின்மணிப்பூட் கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று. (இ - ள்.) நிழல்விடும் அழகிய மணிப்பூணினையும் வீரக்கழலையுமுடைய போர்விருப்பத்தோனுடைய கல்லினை ஏத்தியது எ-று. (வ - று.) 1அடும்புகழ் பாடி யழுதழுது நோனா திடும்பையுள் 2வைகி யிருந்த - கடும்பொடு கைவண் குருசில் 3கற் கைதொழூஉச் செல்பாண தெய்வமாய் நின்றான் றிசைக்கு . (இ - ள்.) பகைவரைக்கொல்லும் கீர்த்தியைச் சொல்லிக் கலுழ்ந்து கலுழ்ந்து பொறாதே துன்பத்துள்ளே தங்கியிருந்த சுற்றத்தாரோடு கை வளப்பத்தினையுடைய உபகாரிதன் கல்லினைக்கைதொழுது போவாயாக , பாணனே, கடவுளாய் நின்றான் திக்கு எட்டிற்கும் எ-று. (13)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற் . 2. வைகிற்றிருந்த 3. புறநா. 306 : 4; பட்டினப். 78-9 , குறிப்புரை . |