253. இற்கொண்டு புகுதல்
வேத்தமருள் விளிந்தோன்கல்லென
ஏத்தினர் துவன்றி யிற்கொண்டு புக்கன்று.

(இ - ள்.) வேந்தர் போரிடத்துப் பட்டவனுடைய கல்லென்று சொல்லி வழுத்தினராய்ச் செறிந்து கோயிலெடுத்துப் புக்கது எ-று.

(வ - று.)
12வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக்
கோட்புலி யன்ன குருசில்கல் - ஆட்கடிந்து
விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லோரும்
இதற்கொண்டு புக்கா ரியைந்து.

(இ - ள்.) வாளுக்கு உணவுகொடுத்துத் தெளிந்தமணி நின்று இரட்ட, கோட்பாட்டையுடைய புலியையொத்த உபகாரி கல்லை , போராளைத்துரந்து சிலையாற் பெற்ற வெற்றியினையுடைய திறல்வீரர் பலரும் கோயிலெடுத்துப் புக்கார் கூடி எ-று.

(14)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற் .
2. வாட்பலியூட்டி