1காம்புயர் கடத்திடைக் கணவனை யிழந்த பூங்கொடி மடந்தை புலம்புரைத் தன்று. (இ - ள்.) மூங்கில் ஓங்கின கானகத்துத் தன் கொழுநனையிழந்த பொலிந்த கொடி போன்ற மடந்தையது தனிமையைச் சொல்லியது எ-று. (வ - று.) நீர்மலி கண்ணொடு நின்றே னிலையிரங்காய் தார்மலி மார்பன் றகையகலம் - சூர்மகளே வெள்ளில் விளைவுதிரும் வேயோங்கும் வெஞ்சுரத்துக் கொள்ளனீ கோடல் கொடிது . (இ - ள்.) நீர்மிகுங் கண்ணோடே நின்றேனுடைய நிலைக்கு வருந்தாயாய் மாலைமிக்க அகலத்தையுடையவன் அழகிய மார்பை , சூர்மகளே , விளாவினது பழமுதிரும் மூங்கில் உயர்ந்த காட்டிடத்துக் கொள்ளுதல் ஒழிவாயாக நீ; கொள்ளுமது மிகவும் கொடுமையுடையது எ-று. (1)
1. புறநா.253,உரை,மேற். |