ஆடமைத் தோளி விரிச்சியுஞ் 12சொகினமும் வேறுபட வஞ்சி விதுப்புற் றன்று. (இ - ள்.) அசையும் மூங்கில்போன்ற தோளினையுடையாள் நற் சொல்லும் நிமித்தமும் விகற்பிப்பப் பயப்பட்டு நடுக்கமுற்றது எ-று. (வ - று.) வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவந் தாங்கினான் சாந்தா ரகலத்துத் தாழ்வடுப்புண்-தாந்தணியா மன்னா சொகின மயங்கின வாய்ப்புளும் என்னாங்கொல் பேதை யினி. (இ - ள்.) அரசர் ஆரவாரிப்ப வெய்ய பூசலிடத்து அயிற்காட்டைத் தடுத்தவனுடைய சந்தனம் நிறைந்த மார்பிடத்து ஆழ்ந்த மார்பிடத்து ஆழ்ந்த வாயினையுடைய புண்கள்தாம் தீரா; பொருந்தா, நிமித்தமும்; கலங்கியிருந்தன, விரிச்சியும்; என்னாமோ, மடவாள் இப்பொழுது! எ-று. (11)
1. பு.வெ. 265: 1, 310, கொளு, உரை. (பி-ம்.) 2. சோகியும் |