செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசோர்ந் தன்று. (இ - ள்.) தொழில் அழகுபெற்ற வீரக்கழலினையுடைய வேந்தன் துஞ்சினனாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி ஓழுக்கம் தளர்ந்தது எ-று. (வ - று.) தாயன்னான் றார்விலங்கி வீழத் தளர்வொடு நீயென்னாய் நின்றாயென் னெஞ்சளியை-ஈயென்றார்க் கில்லென்ற றேற்றா விகல்வெய்யோன் விண்படரப் புல்லென்ற நாப்புலவர் போன்று. (இ - ள்.) எல்லாவுயிர்க்கும் தாயன்னவன் மாற்றார் கொடிப்படையைத் தடுத்துப்பட மெலிவுடனே சேதனமாய் நின்றாயோ? அசேதனமாய் நின்றாயோ? உகாது நீ என்னாகி நின்றாய் ? என்னுடைய மனமே, நீ அளியினையுடையை; எனக்கு இது தருகவென்று வேண்டினோர்க்கு இல்லையென்னும் வார்த்தையையறியாத போர்விரும்புவோன் விண்ணிலே செல்லப் புற்கென்ற செந்நாப்புலவரை ஒத்து எ-று. இது சுற்றத்தார்மேற்று. (14) |