268. இதுவுமது
கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினும்
மொழிந்தனர் புலவ ரத்துறை 1யென்ப.

(இ - ள்.) இறந்தோன்றன்னுடைய நாமத்தை அன்புற்றுச் சொல்லினும் முன்புசொன்ன துறையென்று சொல்லுவர் அறிவுடையோர் எ-று.

(வ - று.)
நின்று நிலமிசையோ ரேத்த நெடுவிசும்பில்
சென்று கழிந்தான் செருவெய்யோன் - என்றும்
அழலுங் கதிர்வே லவன்புகழ் பாடி
உழலு முலகத் துயிர்.

(இ - ள்.) 2தற்பராய் நின்ற பூமியினுள்ளோர் துதிப்ப நீடும் பெரிய வானிலே போயினான், பூசல்விரும்புவோன்; எந்நாளும், எரியும் ஒளி வேலினையுடையவனது கீர்த்தியைச் சொல்லிச் சுழலும், எல்லாவுலகத் துயிரும் எ-று.

(15)

1. என்ப : அசை.
2. தற்பராய்