272. புலவரேத்தும் புத்தேணாடு
1நுழைபுலம் படர்ந்த நோயறு காட்சி
விழைபுலங் கடந்தோர் வீடுரைத் தன்று.

(இ - ள்.) நுண்ணிதான அறிவு சென்ற குற்றமற்ற தரிசனத்தையுடையராய் இந்திரியசயம் பண்ணினார் விரும்பும் மேலுலகத்தைச் சொல்லியது எ-று.

(வ - று.)
பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலகம்
ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய
பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகலின் றிளிவரவு மின்று.

(இ - ள்.) மெய்ஞ்ஞானிகள் விரும்பி யுறையும் விண்ணுலகத்தை ஐயப்பாடு ஒன்றுமின்றியே உணர்ந்துசொல்லின், வெவ்விதான பகற்பொழுதுமில்லை; இரவுப் பொழுதுமில்லை; பாசமுமில்லை; உணவுமில்லை; மாறுபாடுமில்லை; தாழ்வுமில்லை எ-று.

(4)

1. குறள், 407.