280. பகட்டு முல்லை
வயன்மிகு சிறப்பின் வருத்தமு நோன்மையும்
வியன்மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று.

(இ - ள்.) பழனத்தின் மிக்க நன்மையாகிய முயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம்பொறுத்தலாலும் அகன்றமனைக்கு உரிமையாளனை ஏருடன் உவமித்தது எ-று.

(வ - று.)
உய்த்தல் பொறுத்த லொழிவின் றொலிவயலுள்
எய்த்த லறியா 1திடையின்றி-வைத்த
படுநுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி யெங்கணவ னேர்.

(இ - ள்.) செலுத்தல் பாரம்பொறுத்தல் நீங்குதலின்றி நீரொலிக்கும் விளைபுலத்திடத்து இளைத்தலறியாது இடையீடின்றிக் கழுத்தின் மேல் வைத்த மிக்க நுகத்தைப் பூண்ட ஏரொடு நேரொக்கும் உயர்ந்த புகழினையுடைய எம் கொழுநன் எ-று.

(6)

1. மணி.14:27.