281. பான்முல்லை
அரிபா யுண்க ணாயிழைப் புணர்ந்தோன்
பரிவக லுள்ளமொடு பால்வாழ்த் தின்று.

(இ - ள்.) செவ்வரி கருவரி பரந்த மையுண்ட விழியினையும் தெரிந்த ஆபரணத்தினையும் உடையானை மணந்தவன் வருத்தம் நீங்கின மனத்துடனே விதியை ஏத்தியது எ-று.

(வ - று.)
திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்கு பேரொளி
1அங்கண் விசும்பி னகத்துறைக-செங்கட்
குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப்
பயில்வளையை நல்கிய பால்.

(இ - ள்.) மதியிலங்கும்,மிக்கு விளங்கும் பெரியசோதியினையுடைய அழகிய இடத்தினையுடைய சுவர்க்கத்திலே உறைவதாக;சிவந்த கண்ணினையுடைய குயிலின் இசைபோன்ற இனிய சொல்லினையும் கூரிய எயிற்றினையும் செய்ய வாயினையும் செறிந்த தொடியினையுமுடையாளை எனக்குத் தந்த விதி எ-று.

(7)

1. மதுரைக். 384; நாலடி.151,373.