286. ஐயம்
1கன்னவி றோளான் கண்டபி னவளை
இன்னளென் றுணரா னையமுற் றன்று.

(இ - ள்.) உலக்கல் சீலிக்கப்பட்ட தோளிளையுடையான் தரிசித்தபின் அவளை இன்ன தன்மையளென்று அறியான் ஐயப்பட்டது எ-று.

(வ - று.)
2தாமரைமேல் வைதிய தையல்கொ றாழ்தளிரிற்
காமருவும் வானோர்கள் காதலிகொல்-தேமொழி
மையம ருண்கண் மடந்தைகண்
ஐய மொழியா தாழுமென் னெஞ்சே

(இ - ள்.) தாமரைப்பூவின்மேலே தங்கின திருமகள்கொல்லோ ? தாழும் தளிரினையுடைய சோலைமருவும் வானிடத்தோர்தம் காதன்மிக்க தெய்வமகள்கொல்லோ ? இனியமொழியினையும் அஞ்சனமேவின விழியினையுமுடைய மடவாளிடத்து ஐயப்பாடு ஒழியாது துயரத்திலே அழுந்தா நின்றது, என்னுடைய நெஞ்சு எ-று.

(2)

1. பு. வெ. 295.
2. நாற்கவி. சூ. 120, உரை, மேற்.