மாநிலத் தியலு மாத ராமெனத் 1தூமலர்க் கோதையைத் துணிந்துரைத் தன்று. (இ - ள்.) பெரிய பூமியிடத்து நடக்கும் காதலினையுடையார் இவரெனச் சொல்லித் தூய்தான பூமாலையினையுடையாளைத் தெளிந்து சொல்லியது எ-று. (வ - று.) 2திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும இருநிலஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவ ளகடலித் தணங்கே. (இ - ள்.) அழகிய நுதலும் வேர்முகிழ்க்கும்; தேனையுடைய மாலையும் வாடும்; பெரியநிலத்தினைச் சிவந்த அடியும் பொருந்தும்; செவ்வரி கருவரிபரந்த நீண்ட இமையினையுடைய மையுண்ட விழியும் இமைக்கும்; இவள் அகன்ற பூமியிடத்து மானிடமகளாகிய தெய்வமாகும் எ- று. மற்று: வினைமாற்று. இவள் ஆகுமென்க. (3)
1. தூய்தாங் கோதை 2. ஷ. சூ.121, உரை, மேற்.; யா. கா. செய். 15, மேற்.; பெருங். 4. 17 : 32-3. |