இவட்பயத் தெடுத்தோர் வாழியர் நெடிதென அவட்பயத் தோரை யானாது புகழ்ந்தன்று. (இ - ள்.) இவளைப் பெற்றெடுத்தோர் பெரிதும் வாழ்வாராக வெனச் சொல்லி அவளைப் பெற்றோரை அமையாது புகழ்ந்தது எ-று. (வ - று.) கல்லருவி யாடிக் 1கருங்களிறு காரதிரும் மல்ல்லஞ் சாரன் மயிலன்ன - சில்வளைப் பலவொலி கூந்தலைப் பயந்தோர் நிலவரை மலிய நீடுவா ழியரே. (இ - ள்.) மலையருவி யாடி வலிய யானை மேகம்போல முழிங்கும் வளப்பத்தினையுடைய அழகிய மலைப்பக்கத்து மயிற்பேடையையொத்த சில தொடியினையும் பலபகுதியாய்த் தழைந்த மயிரினையுமுடையாளைப் பெற்றோர், பூமியெல்லையிலே மிக நெடுங்காலம் வாழ்வாராக எ-று. (5)
1. பு. வெ. 37 : 4 |