கண் மகிழ்ந்து துடிவிம்மப் புண்மகிழ்ந்து புகன்றாடின்று. (இ - ள்.) துடியின்கண் மகிழ்ந்தொலிப்பத் தன்புண்ணைப் பிரியப்பட்டு விரும்பிக் கூத்தாடியது எ - று. அதனைப் புகழ்ந்தாடியதூஉமாம். (வ - று.) மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் பூவா ளுறைகழியாப் போர்க்களத் - தோவான் 1துடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின் றடியிரட்டித் திட்டாடு மாட்டு. (இ - ள்.) பகைவர் உயிருலரத் தலையினை நீக்கிக் கவந்தமாக்கி நின்ற பிள்ளைத்தன்மையை எய்தியவன் பொலிவினையுடைய வாளினை உறையினின்றும் வாங்கிப் பூசற்களரியிலேயொழியான்; துடிகொட்டி ஆர்ப்பரவ மிகக் கட்டிய வீரக்கழலினையுடையார் முன்னேநின்று இட்ட வடியின்மேல் அடியிட்டு ஆடுங்கூத்து எ - று. ஆட்டு ஓவானென்க. (8) 1.துடியு ருட்டி விம்ம |