தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதற் காம்பேர் தோளி கண்டுசோர்ந் தன்று. (இ - ள்.) மதுப்பொழியும் மாலையினையுடைய தலைவனை அழகிய நுதலினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடையாள் நோக்கி மெலிந்தது எ-று. (வ - று.) கடைநின்று காம நலியக் கலங்கி இடைநின்ற வூரலர் தூற்றப் - புடைநின்ற 1எற்கண் டிலனந் நெடுந்தகை தற்கண் டனென்யான் கண்ட வாறே. (இ - ள்.) என்னிடத்திலே ஆசையானது நின்று நெருக்க மயங்கி நடுவுநின்ற ஊர் அலரெடுப்பப் பக்கத்திலே நின்ற என்னைக் கண்டிலன், அந்தப் பெரிய மேம்பாட்டினையுடையவன்; தன்னைக் கண்டேன் யான்; கண்டபடியே ! எ-று. (1)
1. பு.வெ.307 : 3-4. |