வண்டமர் குஞ்சி மைந்தனை நயந்த ஒண்டொடி யரிவை யுட்கொண் டன்று. (இ - ள்.) சுரும்பு மேவும் மயிரினையுடைய தலைவனை விரும்பிய ஒள்ளிய வளையினையுடைய தலைவி உட்கொண்டது எ-று. (வ - று.) உள்ள முருக வொளிவளையுங் கைநில்லா கள்ளவிழ் தாரானுங் கைக்கணையான் - எள்ளிச் சிறுபுன் மாலை தலைவரின் உறுதுய ரவலத் துயலோ வரிதே. (இ - ள்.) நெஞ்சு வருந்த ஒள்ளிய தொடிகளும் கரத்தைப் பொருந்தாவாயின தேனொழுகப்பட்ட மாலையினையுடையானும் என்னுடைய கரங்களுக்கு எய்தானாயினான்; இகழ்ந்து சிறியதாய்ப் புற்கென்ற மாலைக் காலம் கைகூடின், மிகும் வருத்தத்தைச் செய்யும் இழுக்கினின்றும் பிழைத்தல் சால அருமையுடைத்து எ-று. (3) |