3. வெட்சியரவம்
கலவார் முனைமேற்
செலவமர்ந் தன்று .

(இ - ள்.) பொருந்தாதார் முனையிடத்துப் போதலை விரும்பியது எ-று.

(வ - று.)
1நெடிபடு கானத்து நீள்வேன் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
2வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுட் காரி 3கலுழ்ம்.

(இ - ள்.) சிள்வீடு கறங்குங் காட்டிடத்து நீண்ட வேலினையுடைய மறவர் காலிலே செருப்பைத் தொட்டுக் கடத்தற்கரிய வழியிடத்துச் செல்வான்வேண்டித் துடியைக் கொட்டப்பண்ணி வெட்சிப்பூவைச் சூடப்பகைவர் மணியாற்சிறந்த பசுவினையுடைத்தான காட்டிடத்துக் காரியென்னும் புள்ளுத் துந்நிமித்தமாக 4அழாநிற்கும் எ-று.

(3)

1. தொல். புறத். சூ. 3, இளம். மேற்.
2. சிலப். 12 : "உட்குடை" .
3. எழும் .
4. எழாநிற்கும் .