வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன் அரிவைய ரறிகென வுரைப்பினு மதுவே. (இ - ள்.) அழகிய வளையை நெகிழப் பண்ணினோன் முன்னேபோவேனாகத் துணிந்தேன்; அரிவையரெல்லாம் இதனை அறிகவெனச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) நல்வளை யேக நலந்தொலைவு காட்டிய செல்லல் வலித்தேனச் செம்மன்முன் - பில்லாத வம்ப வுரையொடு மயங்கிய அம்பற் பெண்டிரு மறைகவெம் மலரே. (இ - ள்.) அழகிய தொடி கழல என் அழகழிவு காட்டுவான் வேண்டிப் போதல் உடன்பட்டேன், அத்தலைவன் முன்பு; இல்லாத புதுவார்த்தையொடு கலங்கிய புறங்கூறும் பெண்டிரும் சொல்லுக, எம்முடைய அலரை எ-று. யான் செல்ல வலித்தேனெனச் சொல்லிற் பெருந்திணையாம். (12) |