இறைவளை நெகிழ வின்னா திரங்கிப் பிறைநுதன் மடந்தை பிரிவிடை யாற்றின்று. (இ - ள்.) முன்கையில் தொடி சோர வெறுத்து வருந்தி இளமதி போன்ற நுதலினையுடைய மடவாள் தலைமகன் பிரிந்தவிடத்து ஆற்றியது எ-று. (வ - று.) ஓடுக கோல்வளையு மூரு மலரறைக தோடவிழ் தாழை துறைகமழக் - கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொண் மான்மாலை நீங்கானென் னெஞ்சகத்து ணின்று. (இ - ள்.) கையைவிட்டுப் போவனவாக, திரண்டதொடியும்; ஊரிலுள்ளாரும் பழிதூற்றுக; இதழ்விரியுந் தாழை நீர்த் துறையெல்லாம் மணம் நாறச் சங்குபோல் மலரும் பொலிந்த கடற்கானலையுடைய சேர்ப்பன் தனிமைகொண்ட மயக்கமுடைத்தான மாலைக் காலத்துப் போகான், என் நெஞ்சிடத்து நிலைபெற்று எ-று. (3) |