உறுவரை மார்ப னொள்ளிணர் நறுந்தார் கறுவொடு மயங்கிக் கண்சிவந் தன்று. (இ - ள்.) பெரிய மலைபோன்ற அகலத்தினையுடையவனது ஒள்ளிய தொத்தினையுடைய கமழுமாலையை முனிவுடனே கலங்கித் தலைவி கோபித்தது எ-று. (வ - று.) கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின் ஆடிய சாந்தி னணிதொடர்ந்து-வாடிய தார்க்குவளை கண்டு தரியா விவண்முகத்த கார்க்குவளை காலுங் கனல். (இ - ள்.) மணந்த கொழுநன் அணுகக் கொடியனையாள் மார்பிடத்துத் தோய்ந்த சந்தனத்தின் அழகு மேவிச் செவ்வியழிந்த செங்கழுநீர் மாலையைக் கண்டு பொறாவாய் இவளுடைய முகத்திற் செவ்விக்குவளை யாகிய கண்கள் அழலைச் சொரியும் எ-று. (11) |